top of page

About Us

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைத் தொடங்கிய அமரர் நெடுஞ்செழியன் துவங்கிவைத்த மிகமுக்கிய பணி ‘அறிவுத்தேடலும், அறிவுப்பகிரலும்’ இந்த

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைத் தொடங்கிய அமரர் நெடுஞ்செழியன் துவங்கிவைத்த மிகமுக்கிய பணி ‘அறிவுத்தேடலும், அறிவுப்பகிரலும்’ இந்த நோக்கத்தில் அவர் ஒருங்கிணைத்த குழு வெளிக்கொணர்ந்த சூழல் சார்ந்த வெளியீடுகள் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் அறிவியக்க வரலாற்றில் தடம் பதித்தவை. மிகவும் தொலைநோக்குப் பார்வையுடன் அன்றைய பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட நூல்களின் தாக்கம் இல்லாத சூழலியலாளர்களே தமிழ்நாட்டில் இல்லை என்று கூறலாம்.   பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் இரண்டாம் ஓட்டத்திலும் இந்த “அறிவுத் தேடல் – அறிவுப் பரவல்” முயற்சியை தொடர்ந்து மேற்கொள்கிறோம். இயற்கையை அறிவதே அறிவியல். ஆனால், இது எளிதான காரியமல்ல. இதற்கிடையில் இயற்கையை வெற்றி கொள்வதே அறிவியல் என்று நம்புவோர் செய்யும் பல காரியங்கள் இயற்கையை சீரழிக்கின்றன.   காலம் மாறும் வேகத்தைவிட அதிகமாகவே தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. இந்த வேகத்திற்கு இணையாக புவியும் பலவிதத்தில் பாதிக்கப்படுகிறது. இது குறித்த ஆய்வுகள் உலகெங்கும் நடைபெறுகிறது.  உலகமயமாக்கல் யுகத்தில் பல்வேறு நாடுகளின் தொழில்நுட்பங்கள் இந்தியாவில் நடைமுறைக்கு வரும்போது, அந்தத் தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் எதிர்விளைவுகள் குறித்து உலக நாடுகளின் அனுபவங்களை நாம் புறக்கணிக்க முடியாது.   இந்நிலையில் இயற்கையை புரிந்து கொள்ளவும், இயற்கையை சிதைக்காத வாழ்வியலை பரப்பவும், இயற்கையை சிதைக்கும் தொழில்நுட்பங்களை விமர்சனம் செய்வது நமது காலத்தின் கட்டாயமாகிறது. இவற்றை தமிழுக்கு கொண்டு வரும் பணியில் பூவுலகின் நண்பர்கள் ஈடுபட்டுள்ளது.   இப்பணியின் ஒரு கட்டமாகவே, 80க்கும் மேற்பட்ட நூல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. பூவுலகின் நண்பர்கள் வெளியீடுகள் அனைத்தையும் காலநிலை பதிப்பகத்தின் வாயிலாகப் பெறலாம்.   காலநிலை பதிப்பகத்தின் நூல்களை வாங்கி ஆதரிக்கும் நண்பர்கள், நூல்களின் மீதான ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் முன்வைத்தால் எங்கள் பணி செழுமையடையும்.

bottom of page